நாடு முழுவதும் காற்று மாசு மோசமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை...


காற்று மாசு ஏற்படுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், எனவே பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கில் விளக்கமளித்திருந்த பட்டாசு வியாபாரிகள், பசுமைப்பட்டாசுகள் வெடிப்பதால் காற்றுமாசு ஏற்படுவதாக நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தீர்ப்பளித்துள்ள பசுமை தீர்ப்பாயம், நாடு முழுவதும் காற்றுமாசு மோசமாக இருக்கும் இடங்களிலும், டெல்லி மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதிலும் பட்டாசு வெடிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.



மேலும், காற்றுமாசு மிதமாகவும், அதற்கு கீழாகவும் உள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட 2 மணி நேரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

திருமணத்திற்கு லயன் சேவா சங்கம் சார்பாக செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி...